புரோட்டா சூரி டூ கதாநாயகன் சூரி
“வெண்ணிலா கபடி குழு” திரைப்படத்தின் மூலம் புரோட்டா சூரியாக பிரபலமான காமெடி நடிகர் சூரி தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகனாக உருமாறியுள்ளார். தனது ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டு அதன் பின் தனது கடும் முயற்சியால் காமெடி நடிகராக ஜொலித்து தற்போது கதாநாயகனாகவும் தடம் பதித்து வருகிறார் சூரி. இவரின் வளர்ச்சி பலரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.

50 புரோட்டா காமெடி
“வெண்ணிலா கபடி குழு” திரைப்படத்தில் சூரி 50 புரோட்டா சாப்பிடும் காமெடி காட்சியை நம்மால் மறந்திருக்க முடியாது. இந்த காமெடி காட்சியில் சூரி 50 புரோட்டாக்கள் சாப்பிடுவது போல் நமக்கு காட்டியிருப்பார்கள். ஆனால் அந்த காட்சியில் அவர் உண்மையில் சாப்பிட்ட புரோட்டாக்களின் எண்ணிக்கை 13. 13 புரோட்டாக்களே சாப்பிட முடியாமல் சாப்பிட்டதாகவும் சில புரோட்டாக்களை இயக்குனருக்கு தெரியாமல் பின்னால் தூக்கி எறிந்துவிட்டதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் சூரி.
