எகிறும் எதிர்பார்ப்பு
அஜித்குமாரின் “விடாமுயற்சி” திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்காக வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இதில் அஜித்குமார் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தெரிய வருகிறது. இதில் அஜித்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் அர்ஜூன் தாஸ், பிரபு, பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளது.
அஜித்தின் கதாபாத்திரம் இதுதான்…
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிக்கையில் பேட்டியளித்தார். அதில் அவர் பேசியபோது, “அஜித் கதாபாத்திரம் எந்தளவுக்கு மாஸ் ஆக இருக்கிறதோ அந்தளவுக்கு எமோஷனல் கலந்தும் இருக்கும். அந்த எமோஷனல் பாயின்ட்தான் மொத்த படத்துக்கான பயணம். முற்றமுழுதாக ஆக்சன் பண்ண முடியாது” என கூறியுள்ளார்.

அதில் மேலும் பேசிய அவர், “ஃபேமிலியாக பெரிதாக கனெக்ட் ஆக கூடிய இடங்கள் இருக்கின்றன. ஒரு அப்பாவுக்கும் பையனுக்குமான பிணைப்பும் படத்தில் இருக்கிறது” எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.