விஜய்யின் கடைசி திரைப்படம்
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளார். தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் “ஜனநாயகன்” திரைப்படம் அவரது கடைசி திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறவுள்ளார் விஜய். இந்த நிலையில் “ஜனநாயகன்” திரைப்படத்தை குறித்தான ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு
அதாவது “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது. 30 நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN Productions அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதாம். இதன் காரணமாக இந்நிறுவனத்தின் வங்கி கணக்குகளுக்கு சீல் வைத்துவிட்டதாம் வருமான வரித்துறை.
KVN Productions நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் “ஜனநாயகன்” படத்தின் படப்பிடிப்பிற்கான செலவுகளுக்கு நிதி இல்லையாம். கிட்டத்தட்ட 22 நாட்கள் தொழிலாளர்களுக்கு கூலியே தராமல் படப்பிடிப்பை நடத்தியிருக்கின்றனர். இவ்வாறு பல நாட்களாக கூலியே தராமல் படப்பிடிப்பை நடத்தியதால் பெப்சி அமைப்பிற்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே பிரச்சனைகள் எழுந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பே தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாம்.

எதனால் இந்த ஐடி ரெய்டு?
KVN Productions நிறுவனத்தின் நிறுவனர் இதற்கு முன் Prestige என்ற நிறுவனத்தின் பார்ட்னராக இருந்தாராம். ஒரு காலகட்டத்திற்கு பிறகு அந்நிறுவத்தில் இருந்து வெளிவந்து தயாரிப்பாளராகிவிட்டராம். தற்போது Prestige நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில் KVN Production நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.