எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்…
அஜித்குமாரின் “விடாமுயற்சி” திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்த நிலையில் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்காக ரசிகர்கள் பலரும் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். நிச்சயம் “குட் பேட் அக்லி” பந்தயம் அடித்துவிடும் என நம்புகின்றனர்.

இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள நிலையில் இவர்களுட அர்ஜூன் தாஸ், பிரபு, பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி இத்திரைப்படம் வெளிவரவுள்ளது.
GOAT படத்தை விட அதிக திரையரங்குகளில்…
கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த “GOAT” திரைப்படத்திற்கான தமிழக திரையரங்கு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றது. அந்த வகையில் GOAT திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 1020 திரையரங்குகளில் வெளியானதாம்.

இந்த நிலையில் “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் தமிழக திரையரங்கு உரிமையையும் ரோமியோ பிக்சர்ஸே வாங்கியுள்ளதாம். இத்திரைப்படத்தை 1050 திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளனராம். இவ்வாறு “GOAT” திரைப்படத்தை விட அதிக திரையரங்குகளில் “குட் பேட் அக்லி” திரைப்படம் வெளியாகவுள்ளதாம்.