ஹாரிஸ் மாமா
90’ஸ் கிட்களால் ஹாரிஸ் மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், 90களில் பிறந்தவர்களின் பதின்பருவத்தை தனது இசையின் மூலம் இனிமையாக்கியவர். இப்போதும் இவரது பல பாடல்கள் காலத்தை தாண்டியும் ரசிக்கக்கூடிய ஒன்றாகும். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஹாரிஸ் ஜெயராஜ் விஜய் திரைப்படங்களுக்கு இசையமைக்காதது குறித்த ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

10 படங்களுக்கு No சொல்லிட்டேன்
“விஜய் தன்னுடைய யூத் படத்திற்கு என்னை இசையமைக்க அழைத்தார். அதன் பின் சச்சின், காவலன், வேலாயுதம் போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைக்க கூடிய வாய்ப்புகள் வந்தது. யூத் திரைப்படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட விஜய்யின் பத்து திரைப்படங்களுக்கும் ஒவ்வொரு திரைப்படம் உருவாகும்போதும் என்னை விஜய் இசையமைக்கும்படி கூறுவார். ஆனால் நண்பன் திரைப்படத்தில்தான் அது அமைந்தது. அந்த திரைப்படம்தான் நான் இசையமைக்க தகுந்த திரைப்படம் என தோன்றியது” என அப்பேட்டியில் ஹாரிஸ் ஜெயராஜ் கூறியுள்ளார்.

விஜய் நடித்த “நண்பன்”, “துப்பாக்கி” ஆகிய திரைப்படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.