மீண்டும் இணைந்த கூட்டணி
விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் இணைந்து மலையாளத்தில் “19 (1)(a)” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சில நாட்களாகவே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு திருச்சி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்று வந்தது.

சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை குறித்து பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கண்ணீர் விட்ட படக்குழுவினர்…
“பாண்டிராஜுடைய இயக்கத்திலே விஜய் சேதுபதி நடிக்கின்ற திரைப்படம் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக இருக்கும் என நினைக்கிறேன். அந்தளவுக்கு உணர்ச்சிகரமான காட்சிகளை அத்திரைப்படத்தில் அமைத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்” என கூறியுள்ள அவர்,

“அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் நானும் கலந்துகொண்டேன். ஒரு உணர்ச்சிவயமான காட்சியிலே விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் நடித்தபோது அந்த படப்பிடிப்பு தளத்திலே இருந்த பல பேருடைய கண்களின் கண்ணீர் கசிந்ததை என்னால் பார்க்க முடிந்தது” என்று அவர் அந்த வீடியோவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.