லீக் ஆன காட்சி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் “கூலி” திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, நாகர்ஜுனா, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இதனிடையே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சில இணையத்தில் லீக் ஆகியது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.
அதிரடி நடவடிக்கை எடுத்த நெல்சன்

இந்த நிலையில் நெல்சன் ரஜினிகாந்தை வைத்து “ஜெயிலர் 2” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், ஊழியர்கள் ஆகியோரின் மொபைல் போன்களை அவர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போது வாங்கி வைத்துவிடுகிறார்களாம்.
உணவு இடைவேளையின்போது மறுபடியும் தந்துவிட்டு, இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வாங்கிவைத்து விடுகிறார்களாம். அதன் பின் அந்த நாள் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகுதான் மீண்டும் தருகிறார்களாம். இந்த வழக்கம் மிகவும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.