சுமாரான வரவேற்பு..
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “விடாமுயற்சி” திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் சுமாரான வரவேற்பே கிடைத்தது. மேலும் இத்திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திற்கு இத்திரைப்படம் பெரும் நஷ்டத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தோல்வியால் மகிழ் திருமேனிக்கு தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லையாம்.

விக்ரமிடம் இருந்து பதில் வரவில்லை…
“விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போதே சீயான் விக்ரம் தரப்பில் இருந்து மகிழ் திருமேனியை அணுகினார்களாம். தனது அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்க பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீயான் விக்ரம் தனது ஆட்கள் மூலம் தொடர்புகொள்ளச் செய்தாராம். ஆனால் மகிழ் திருமேனியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லையாம்.

“விடாமுயற்சி” திரைப்படம் வெளிவந்த பிறகு மகிழ் திருமேனி விக்ரமை தொடர்புகொள்ள முயன்று வருகிறாராம். ஆனால் விக்ரமிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லையாம். இவ்வாறு ஒரு தகவல் கூறப்படுகிறது.