2026 தேர்தலை நோக்கி விஜய்
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை சொந்தமாக தொடங்கிய நிலையில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் எதிர்கொள்ள உள்ளார். தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்து முடித்துவிட்ட பின் வருகிற ஜூலை மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் விஜய்.

விஜய் எடுக்குற முடிவுலதான் இருக்கு…
இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான ரங்கராஜ் பாண்டே தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “காய்த்த மரம்தான் அடிக்கடி கல்லடி வாங்கும் என்பது போல் உள்ளதிலேயே வலுவான கூட்டணியை பலமான கூட்டணியை திமுகதான் வைத்திருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து ஒருவரையாவது உருவிவிடமாட்டோமா என்று பயங்கர முயற்சிகள் நடக்கிறது. ஆறு மாதம் கழித்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “திரு விஜய் அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அதிமுக விரும்புகிறது. ஆனால் திரு.விஜய் அவர்கள் தனியாக போக வேண்டும் என நினைக்கிறார். அவருமே டிசம்பரில்தான் ஒரு முடிவை எடுப்பார். அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதை பொறுத்துத்தான் பிஜேபியுடன் சேரலாமா வேண்டாமா என அதிமுக சிந்திக்கும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.