ராஷ்மிகா நடித்த பாலிவுட் பிளாக்பஸ்டர்
ராஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்தியா மட்டுமல்லாது பல பாலிவுட் திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் கதாநாயகியாக நடித்து கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்து அதிக வரவேற்பை பெற்ற பாலிவுட் திரைப்படம் “சாவா”.

இதில் விக்கி கவுசல் கதாநாயகனாக நடித்திருந்தார். மராத்திய ராஜ்ஜியத்தின் வரலாற்றை மையமாக வைத்து உருவான இத்திரைப்படத்தில் மராத்தியர்களிடம் இருந்து கொள்ளையடித்த தங்கப்புதையலை முகலாயர்கள் மத்திய பிரதேசத்தின் பர்ஹான்பூர் பகுதியில் அமைந்துள்ள அஸிகார் கோட்டையில் புதைத்து வைத்திருப்பதாக ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது.
திடீரென கிளம்பிய ஊர் மக்கள்
இந்த நிலையில் இத்திரைப்படத்தை பார்த்த அப்பகுதி மக்கள் அஸிகார் கோட்டைப் பகுதியில் புதையலை தேடி படையெடுத்துள்ளனர். தற்போது பலரும் மண்ணிற்குள் புதையலை தேடி வருவதாக இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.