நல்ல நடிகர்தான்… ஆனால்?
“பகவதி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஜெய். அதனை தொடர்ந்து “சென்னை 28” திரைப்படத்தின் மூலம் அவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். அதன் பிறகு அவர் நடித்த “சுப்ரமணியபுரம்” திரைப்படம் அவரது அபாரமான நடிப்பிற்கு சான்றாக விளங்கிய திரைப்படமாக அமைந்தது. அதன் பின் அவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவரது கெரியர் சரியாக அமையவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகை சோனா ஜெய்யின் மறுபக்கத்தை குறித்து பகிர்ந்துகொண்டது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஜெய் இப்படிப்பட்டவரா?

அதாவது நடிகர் ஜெய் ஒரு Play Boy என அப்பேட்டியில் சோனா மிகவும் வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் அப்பேட்டியில் பேசிய அவர், “ஜெய் ஒரு காலத்தில் நன்றாகத்தான் இருந்தார். ஆனால் இப்போது அவரது கெரியரில் அவர் பாதை மாறிவிட்டார்” எனவும் கூறியிருந்தார். ஜெய்யும் சோனாவும் இடம்பெற்ற பல புகைப்படங்களால் இணையத்தில் பல கிசுகிசுக்கள் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.