கடைசி படம்
விஜய் தற்போது தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் நடித்து முடித்த பிற்பாடு விஜய் முழு நேர அரசியல்வாதியாக உருமாற உள்ளார். அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அதற்கான பணிகளில் மும்முரமாக களமிறங்கவுள்ளார். அதன் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதிலும் பல மாவட்டங்களுக்கு விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

பல லட்ச ரூபாய் கேரவான்
இந்த நிலையில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக பல நவீன வசதிகள் கொண்ட சொகுசு கேரவான் ஒன்று தயாராகி வருகிறதாம். இந்த கேரவான் ரூ.30 லட்சம் பொருட்செலவில் உருவாக உள்ளதாம். வருகிற மே மாதம் முதல் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.