நாடக கலைஞர்கள்
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வந்தார்கள் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்போம். ஆனால் அவர்கள் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு பல மேடை நாடகங்களில் நடித்தனர். அதன் பிறகுதான் அவர்களுக்கு சினிமா வாய்ப்பே கிடைத்தது என்று கூறலாம். எனினும் அவர்கள் சினிமாவில் மிகப் பிரபலமாக ஜொலித்த பிறகும் கூட பல நாடகங்களில் நடித்தனர்.

அதிகம் சம்பாதித்தனரா?
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம், “தமிழ் நாட்டில் நாடக அரங்கேற்றம் உச்சத்தில் இருந்தபோது அதிக சம்பளம் வாங்கிய நடிகர் மற்றும் நடிகை யார்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு சித்ரா லட்சுமணன், “தமிழ் சினிமாவில் மிகப் பெரிய புகழை பெற்ற எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோர் கூட நாடகங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லாரும் நாடகத்தில் நடித்தது நாடகத்தின் மூலம் கிடைக்கும் ஊதியத்திற்காக அல்ல. நாம் நாடகங்களில் நடித்தால் பல நாடக கலைஞர்கள் வாழ்க்கை நடத்துவார்களே என்ற நல்ல எண்ணத்தில்தான் இவர்கள் எல்லாரும் நாடகங்களை நடத்தினார்கள். அதனால் நாடகங்களை பொறுத்தவரை அதிகமான ஊதியம் என்பது எந்த காலகட்டத்திலும் யாருக்குமே கிடையாது” என்று பதிலளித்திருந்தார்.