சீயான் விக்ரம்
தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராகவும் நடிப்பிற்காக தனது உடலை எந்தளவுக்கு வேண்டுமானாலும் வருத்தி நடிக்கக்கூடிய கடின உழைப்பாளியாகவும் திகழ்ந்து வருபவர் விக்ரம். இவர் தற்போது “வீர சூர தீரன் பார்ட் 2” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பல அசாத்திய திறமைகளுக்குச் சொந்தக்காரராக விக்ரம் திகழ்ந்தாலும் சமீப காலமாக அவர் நடித்த எந்த திரைப்படமும் சரியாக போகவில்லை.
விக்ரம்க்கு ஏன் இவ்வளவு கோடி?
விக்ரம் சில ஆண்டுகளாகவே ரூ.50 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். இந்த நிலையில் சமீபத்தில் விக்ரமை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர் ஒருவர், அத்திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை விற்க ஒரு நிறுவனத்தை அணுகியிருந்தாராம்.

அந்த நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையில் அத்திரைப்படத்தை வாங்கிக்கொள்வதாக கூற, அதற்கு அத்தயாரிப்பாளர், “நான் விக்ரமிற்கு ரூ.50 கோடி சம்பளம் தந்துள்ளேன். நீங்கள் கூறுவது மிகவும் குறைவான தொகையாக இருக்கிறதே” என கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்நிறுவனத்தார், “விக்ரம் கடைசியாக ஹிட் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிறது. நீங்கள் என்ன 50 கோடி ரூபாயை சம்பளமாக கொடுத்திருக்கிறீர்களே” என்று கேட்டார்களாம். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்தாராம் அந்த தயாரிப்பாளர்.