எகிறும் எதிர்பார்ப்பு
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ள நிலையில் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

“குட் பேட் அக்லி” திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் நேற்று வெளிவந்தது. ஏப்ரல் 10 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வில்லனுக்கு ரொமாண்டிக் பாடல்…
“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் வில்லனாக நடித்துள்ளார். இதில் அர்ஜூன் தாஸுக்கு ஜோடியாக பிரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ளாராம். இந்த ஜோடிக்கு ஒரு ரொமாண்டிக் பாடலும் இடம்பெற்றுள்ளதாம்.

அதாவது “எதிரும் புதிரும்” திரைப்படத்தில் இடம்பெற்ற மிகப் பிரபலமான பாடலான “தொட்டு தொட்டு பேசும் சுல்தானா” என்ற பாடலை ரீமீக்ஸ் செய்திருக்கிறார்களாம்.