கார் ரேஸில் பிசி…
“விடாமுயற்சி”, “குட் பேட் அக்லி” ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்ட அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் கார் ரேஸில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இனி அக்டோபர் மாதம் வரை கார் ரேஸில் ஈடுபடப்போவதாக அஜித்குமார் முடிவெடுத்துள்ள நிலையில் அடுத்த ஆண்டுதான் அவரது அடுத்த திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கர் அனுப்பிய மெசேஜ்…

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர், நடிகர் அஜித்குமாரின் மொபைல் எண்ணிற்கு, “உங்களிடம் பேசவேண்டும்? எப்போது பேசலாம்?” என்று மெசேஜ் செய்திருக்கிறாராம். ஆனால் அஜித்திடம் இருந்து இதுவரை ஒரு ரிப்ளை கூட வரவில்லை என கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கிய “இந்தியன் 2”, “கேம் சேஞ்சர்” ஆகிய திரைப்படங்களுக்கு சுமாரான வரவேற்பு கிடைத்தது என்பது இதில் குறிப்பிடத்தக்கது.