இளம் தலைமுறை நடிகர்
நடிகர் கவின் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் தலைமுறை நடிகராக வலம் வருகிறார். தற்போது “கிஸ்” திரைப்படத்தில் நடித்துள்ள கவின் அதனை தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் அத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது.
வாத்தியாராக வெற்றிமாறன்…
நடிகர் கவினும் ஆண்ட்ரியாவும் இணைந்து நடித்து வரும் இத்திரைப்படத்திற்கு “மாஸ்க்” என்று டைட்டில் வைத்துள்ளனர். இத்திரைப்படத்தை விகர்ணன் அசோக் என்பவர் இயக்கி வருகிறார். ஆண்ட்ரியா இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார். வெற்றிமாறனின் Grassroot Productions இத்திரைப்படத்தை வெளியிடுகிறது.

இத்திரைப்படத்தின் First look போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்களில் “வாத்தியாராக வெற்றிமாறன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் அட்டகாசமான First Look போஸ்டர்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.