நஷ்டத்தில் லைகா
லைகா நிறுவனம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தது “கத்தி” திரைப்படத்தின் மூலமே. “கத்தி” திரைப்படம் லைகா நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது. ஆனால் அதனை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரித்த பல திரைப்படங்கள் தோல்வியை கண்டன. சமீப உதாரணங்களாக, “லால் சலாம்”, “இந்தியன் 2”, “விடாமுயற்சி” போன்ற திரைப்படங்களை கூறலாம்.

இந்த நிலையில்தான் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் சந்தீப் கிசானை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். இதனை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாகவே இத்திரைப்படம் டிராப் ஆகிவிட்டதாக செய்திகள் வெளிவந்தன. அதாவது லைகா நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக இத்திரைப்படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்பட்டது.
உள்ளே தலையிட்ட விஜய்யின் மாமனார்..

விஜய்யின் மனைவி சங்கீதாவின் தந்தை லண்டன் நகரில் மிகப்பெரிய தொழிலதிபராவார். இவர் லைகா நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி கிட்டத்தட்ட ரூ.25 கோடியை வாங்கிவிட்டதாகவும் அந்த தொகையை வைத்துதான் ஜேசன் சஞ்சய் தனது திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. ஆதலால் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள திரைப்படத்தின் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.