சுமாரான வரவேற்பு
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையில் வெளிவந்தது. ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆதலால் இத்திரைப்படத்தால் இதனை தயாரித்த லைகா நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதாவது “விடாமுயற்சி” திரைப்படம் ரூ.300 கோடி செலவில் படமாக்கப்பட்டது. ஆனால் ரூ.175 கோடிதான் இத்திரைப்படம் வசூல் செய்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து மேலும் ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.
நஷ்டத்திற்கு மேல் நஷ்டம்..
“விடாமுயற்சி” திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியான “Breakdown” திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும். ஆனால் இத்திரைப்படம் உரிய அனுமதி வாங்கி எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

ஆதலால் “Breakdown” படத்தை தயாரித்த பாராமௌண்ட் பிக்சர்ஸ் நிறுவனம், இத்திரைப்படத்தை தழுவி எடுக்க அனுமதி கொடுத்த வகையில் லைகா நிறுவனம் ஒரு குறிப்பிட்டத் தொகையை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என கண்டிஷன் போட்டதாக செய்திகள் தெரிவித்தன. அந்த வகையில் லைகா நிறுவனம் ரூ.17.50 கோடியை பாராமௌண்ட் நிறுவனத்திற்கு அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே “விடாமுயற்சி” திரைப்படத்தால் லைகா நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.