அதிர்ச்சி தகவல்…
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றிருந்தது. அந்த வகையில் ரசிகர்கள் பலரும் அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்காக வெறிகொண்டு காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில்தான் தற்போது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது.

மீண்டும் மீண்டுமா?
“விடாமுயற்சி” திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதன் பின் அத்திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளிவந்த நிலையில் அதே போல் “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் வெளியீடும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் ஏப்ரம் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அஜித்தின் பிறந்த நாளான மே மாதம் 1 ஆம் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.