மாபெரும் வெற்றி
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான “அமரன்” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தின் 100 ஆம் நாள் விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை.

கமல்ஹாசன் இப்படி பண்ணலாமா?
இந்த நிலையில் இது குறித்து பேசிய பிரபல பத்திரிக்கையாளரான பிஸ்மி, “அமரன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு மீடியா மிக முக்கியமான காரணம். மீடியாக்கள் தலையில் வைத்துக்கொண்டாடியதால்தான் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மீடியாக்கள் கண்டிப்பாக வரவேண்டும் என கமல்ஹாசன் கூறியிருக்க வேண்டும். அவர்கள் வருவதால் என்ன குறைந்துப்போகப் போகிறது என கேட்டிருக்க வேண்டும்” என விமர்சித்துள்ளார்.