பராசக்தி
1952 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அறிமுகமான திரைப்படம் “பராசக்தி”.கலைஞர் மு.கருணாநிதியின் வசனத்தில் உருவான இத்திரைப்படம் ஒரு புரட்சிகர திரைப்படமாக அமைந்தது. இந்த “பராசக்தி” என்ற டைட்டிலை தற்போது சுதா கொங்கரா சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி வரும் திரைப்படத்திற்கும் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

உண்மையான பராசக்தி ஹீரோ!
சிவாஜி கணேசன் நடித்த “பராசக்தி” திரைப்படம் பாவலர் பாலசுந்தரம் என்பவர் இயக்கிய “பராசக்தி” என்ற மேடை நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது ஆகும். இந்த மேடை நாடகத்தில் ஹீரோவாக நடித்தவர் T.M.சாமிக்கண்ணு என்ற நடிகர். இவர் “முள்ளும் மலரும்”, “வண்டிச்சக்கரம்”, “உதிரிப்பூக்கள்” என பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அதே போல் இந்த மேடை நாடகத்தில் கதாநாயகியாக பெண் வேஷம் போட்டு நடித்தவர் ஏ.கே.வீராசாமி என்பவர். “முதல் மரியாதை” திரைப்படத்தில் “எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்” என்று இவர் பேசும் வசனம் மிகவும் பிரபலமானது ஆகும்.

இந்த செய்தியை பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார் சிவாஜி கணேசன்.