துப்பாக்கியை பிடிங்க சிவா…
“GOAT” திரைப்படத்தில் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுத்த காட்சி இடம்பெற்றிருந்ததை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விஜய் தற்போது “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இரு திரைப்படங்களும் ஒரே நாளில் மோதப்போகும் சம்பவத்தை தடுத்தி நிறுத்தியுள்ளாராம் சிவகார்த்திகேயன்.

பொங்கலுக்கு வேண்டாம்…
அதாவது விஜய்யின் “ஜனநாயகன்” திரைப்படம் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர உள்ள நிலையில் “பராசக்தி” திரைப்படத்தையும் பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருந்ததாம். ஆனால் சிவகார்த்திகேயனோ “பராசக்தி திரைப்படத்தை 2025 ஆம் ஆண்டே வெளியிட்டுவிடலாம்” என்று கூறினாராம்.

அதன்படி “பராசக்தி” திரைப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட உள்ளதாக படக்குழு முடிவெடுத்துள்ளதாம். இதன் மூலம் சிவகார்த்திகேயன் மீதான விஜய் ரசிகர்களின் ஆதரவு காப்பாற்றப்பட்டுள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.