கலவையான விமர்சனம்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் அஜித்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் அர்ஜூன், ரெஜினா கஸண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களே வெளிவருகின்றன.

அர்ஜூனுக்குலாம் இது தேவையா?

இந்த நிலையில் பிரபல விமர்சகரான பிலிமி கிராஃப்ட் அருண், தனது வீடியோ ஒன்றில் பேசியபோது, “விடாமுயற்சி படத்தில் அர்ஜூனுக்கும் ரெஜினா கஸண்ட்ராவுக்கும் இடையிலான ரிலேஷன்ஷிப் பற்றிய காட்சிகளில் அவர்களின் பின்னணி எல்லாம் எதற்கு? படத்தில் அஜித், திரிஷாவை தவிர மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் கூட்டத்தோடு கும்மி அடிப்பவர்கள் என்று நமக்கு தெரிந்த விஷயம்தான். ஆதலால் அவர்களுக்கெல்லாம் ஒரு பின்னணி இருக்கிறது என்பதை காட்ட வேண்டுமா என்ன? என்ன எனக்கு தோன்றியது” என விமர்சித்துள்ளார்.