ரஜினிகாந்த் 173
ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் ரஜினிகாந்தின் 171 ஆவது திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை தொடர்ந்து 172 ஆவது திரைப்படமாக “ஜெயிலர் 2” திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படத்தை தயாரிக்க இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

போட்டி போடும் தயாரிப்பாளர்கள்?
“கூலி”, “ஜெயிலர் 2” திரைப்படங்களை தொடர்ந்து ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படத்தை தயாரிக்க வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் தனது 173 ஆவது திரைப்படத்தில் இந்த இரண்டு தயாரிப்பாளர்களில் எதாவது ஒரு தயாரிப்பாளரின் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.