பழைய டைட்டில்கள்
சுதா கொங்கரா சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி வரும் திரைப்படத்திற்கு “பராசக்தி” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது 1952 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த படத்தின் டைட்டில் ஆகும். சிவகார்த்திகேயனின் பல திரைப்படங்களில் பழைய திரைப்படங்களின் டைட்டில்களே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. “எதிர்நீச்சல்”, “காக்கிச் சட்டை”, “வேலைக்காரன்”, “மாவீரன்”, “அமரன்” போன்ற திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

தயாரிப்பளரை வலை வீசி தேடி வரும் படக்குழு?
இதனிடையே சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கும் தமிழ் சினிமாவின் ஒரு பழைய கிளாசிக் திரைப்படத்தின் டைட்டிலை வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.

ஆதலால் அந்த கிளாசிக் திரைப்படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி பெற தொடர்புகொண்டபோது அவர் வெளிநாட்டில் இருப்பதாக தெரிய வந்ததாம். விரைவில் அந்த தயாரிப்பாளரை தேடிப்பிடித்து அனுமதி வாங்கி சிவகார்த்திகேயன்-ஏ.ஆர்.முருகதாஸ் பட டைட்டிலை வருகிற 17 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிப்பதாக படக்குழு முயற்சி செய்து வருகிறதாம்.