சிவகார்த்திகேயனின் பராசக்தி
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் டைட்டில் டீசர் நேற்றைய முன் தினம் வெளியானது. 1952 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி Cult சினிமா அந்தஸ்தைப் பெற்ற “பராசக்தி” திரைப்படத்தின் டைட்டிலை சிவகார்த்திகேயனின் திரைப்படத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். சிவாஜி கணேசனின் குடும்பத்திடமும் “பராசக்தி” திரைப்படத்தின் உரிமத்தை வைத்திருக்கிற ஏவிஎம் நிறுவனத்திடமும் அனுமதி பெற்ற பிறகே சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு “பராசக்தி” என்று பெயர் வைக்கப்பட்டது.

ஆனால் சிவாஜி கணேசனின் “பராசக்தி” திரைப்படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனத்தார் “பராசக்தி” திரைப்படத்தின் டைட்டிலை பயன்படுத்த கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏவிஎம்க்கே உரிமை!
இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான பிஸ்மி, தனது வீடியோ ஒன்றில் பேசியபோது, “சிவாஜி கணேசனின் பராசக்தி திரைப்படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸின் பெருமாள் முதலியார் இந்த படத்தின் முழு உரிமத்தையும் ஏவிஎம் நிறுவனத்திடம் விற்றுவிட்டார். ஆதலால் பராசக்தி திரைப்படத்தின் உரிமம் ஏவிஎம்மிடமே இருக்கிறது” என்று கூறியுள்ளார்.