பிறந்தநாள் அறிவிப்புகள்
வருகிற பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாளன்று அவர் நடிக்க உள்ள மூன்று திரைப்படங்கள் குறித்த முக்கியமான அறிவிப்பு வெளியாகவுள்ளது. தற்போது சிம்பு “தக் லைஃப்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அதனை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் “பார்க்கிங்” பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட “STR 48” திரைப்படத்திலும் சிம்பு நடிக்க உள்ளார். இந்த மூன்று திரைப்படங்கள் குறித்த அப்டேட்டுகள் சிம்பு பிறந்தநாளன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை ரீரிலீஸ்!
இந்த நிலையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை “மாநாடு” திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெங்கட் பிரபு இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வகையில் இத்திரைப்படம் நாளை மறுவெளியீடு காண்கிறது.
