பராசக்தி
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “பராசக்தி” திரைப்படத்தின் டைட்டில் டீசர் சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியானது. இத்திரைப்படம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் என கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வரை தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் பேசும் சிவகார்த்திகேயன்
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தின் தெலுங்கு டைட்டில் டீசரில் அவரே தெலுங்கிலும் குரல் கொடுத்துள்ளார். இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த பல திரைப்படங்கள் வேற்று மொழியில் வெளிவந்திருக்கிறது. ஆனால் அத்திரைப்படங்களில் சிவகார்த்திகேயனுக்கு வேறு ஒருவர் டப்பிங் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் “பராசக்தி” திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு சிவகார்த்திகேயனே நேரடியாக தெலுங்கில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.