பிசியான நடிகர்
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார் என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்த செய்தியே. சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ், சிபி சக்கரவர்த்தி போன்ற இயக்குனர்களுடன் அடுத்தடுத்து இணையவுள்ளார். இவ்வாறு ஒரு பிசியான நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். அதே போல் வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

என்னைய தொந்தரவு பண்ணாதீங்க!
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவை சில நாட்களுக்கு முன்பு சந்தித்திருக்கிறார். அப்போது சிவகார்த்திகேயன், “நான் நடிக்க வேண்டிய திரைப்படங்கள் அடுத்தடுத்து உள்ளன. ஆதலால் ஒரு இரண்டு வருடங்களுக்கு என்னை தொந்தரவு செய்யாதீர்கள். அதன் பிறகு நான் உங்கள் இயக்கத்தில் நடிக்கிறேன்” என்று கூறியுள்ளாராம். இதனால் வெங்கட் பிரபு மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இன்று அப்டேட்
சிவகார்த்திகேயனின் 25 ஆவது திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை 4.00 மணிக்கு வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
