வெறித்தனமான புரோமோ
கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து “ஜெயிலர் 2” திரைப்படம் உருவாக உள்ளது. அந்த வகையில் “ஜெயிலர் 2” திரைப்படத்தின் வெறித்தனமான புரோமோ சமீபத்தில் வெளிவந்தது. ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு பக்காவான ஆக்சன் திரைப்படமாக “ஜெயிலர் 2” திரைப்படம் உருவாக உள்ளதாக இந்த புரோமோவில் இருந்து தெரிய வருகிறது.

அது ரஜினி இல்லை, டூப்பு!
“ஜெயிலர் 2” புரோமோ வெளியான நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், தனது வீடியோ ஒன்றில், “ஜெயிலர் 2 புரோமோவில் தொடக்கத்தில் சில காட்சிகளில் ரஜினியின் முகத்தையே காட்டவில்லை. அந்த காட்சிகளை பார்த்தால் ரஜினி மாதிரியே இல்லை. அது டூப்பு” என்று கூறினார். இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி “ஜெயிலர் 2” புரோமோவின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

இதில் “ஜெயிலர் 2” புரோமோ வீடியோ முழுக்க ரஜினியே நடித்திருக்கிறார். ரஜினிக்கு டூப் போடவில்லை என தெரிய வந்தது. இந்த நிலையில் நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து பத்திரிக்கையாளர் அந்தணனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.