90’s Kids Favourite
90’ஸ் கிட்களின் மிகவும் விருப்பத்திற்குரிய இயக்குனராக திகழ்ந்து வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். தனக்கென ஒரு தனி ஸ்டைலில் திரைபாணியை அமைத்துக்கொண்ட கௌதம் வாசுதேவ் மேனன், தனது திரைப்படங்களின் திரைக்கதையை மிகவும் ஸ்டைலாக அமைக்க கூடியவராக வலம் வருகிறார். குறிப்பாக காதல் காட்சிகளை மென்மையாகவும் உள்ளுணர்வோடும் படமாக்குவதில் கைத்தேர்ந்தவர் இவர்.

எனினும் சமீப காலமாக படம் இயக்குவதையும் தாண்டி தமிழில் பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். இந்த நிலையில் இவர் பின்னணி குரல் கொடுத்த ஒரு ஆவணப்படக் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அனிமல் பிளானட்
கௌதம் வாசுதேவ் மேனன் தனது திரைப்படங்களில் வாய்ஸ் ஓவர் கொடுப்பதில் வல்லவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவோம். அந்த வகையில் காட்டு விலங்குகள் சம்பந்தப்பட்ட பல ஆவணங்களை படமாக்கும் “அனிமல் பிளானட்” தொலைக்காட்சிக்கான தமிழ் பதிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.

“கிரியேட்டிவ் கில்லர்ஸ்” என்ற இந்த தொலைக்காட்சி ஆவணத் தொடர் முழுக்க முழுக்க சிங்கத்தை பற்றிய ஆவண தொடராகும். அதே போல் “தி பிக் கேட்” என்ற புலிகளை குறித்த ஆவணத் தொடருக்கும் தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் பின்னணி குரல் கொடுத்துள்ளார். ரசிகர் ஒருவர் இணையத்தில் அவர் பின்னணி குரல் கொடுத்த வீடியோவை பதிவிட அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Dei @menongautham , apdi evlo thaanda kadan vaangi vachiruka … Ipdi animal planet ku la voice over kudukara nilamaiku vantiye da ??? pic.twitter.com/IGHq9UMODY
— Bala ? ( Mbappe Stan ?) (@edenhowzaattt) January 6, 2025