மதகஜராஜா
கிட்டத்தட்ட 12 வருடங்களாக கிடப்பில் கிடந்த “மதகஜராஜா” திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர தயாராக உள்ளது. இத்திரைப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சந்தானம், மயில்சாமி, மனோபாலா, மணிவண்ணன் என பலரும் நடித்துள்ளனர். சுந்தர் சி இத்திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் விஜய் ஆண்டனி இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கை நடுக்கம்
இதனிடையே நேற்று “மதகஜராஜா” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட விஷால், மேடையில் பேசும்போது கைநடுக்கத்துடனே பேசினார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியை தொகுந்து வழங்கிய தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, “விஷாலுக்கு மலேரியா காய்ச்சல்” என்று மேடையிலேயே விளக்கம் கொடுத்தார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து விஷாலின் உடல் நிலையை குறித்து ரசிகர்கள் பலரும் சமூக வல்லைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த இயக்குனர்தான் காரணம்…
இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், தனது வீடியோ ஒன்றில் பேசியபோது “விஷாலின் இந்த நிலைமைக்கு முதல் காரணம் இயக்குனர் பாலாதான். அவன் இவன் திரைப்படத்தில் விஷால் மாறுகண் கதாபாத்திரத்தில் நடித்தபோது விஷாலின் கண் முழியை இழுத்து தைத்துவிட்டார்கள். இது குறித்த மருத்துவ பெயர்கள் எனக்கு தெரியவில்லை.

ஆனால் அவர் தனது கண்களை மாறுகண்ணாக மாற்றி அதில் நடிக்கவில்லை. அவரின் முழியை ஒருபக்கம் இழுந்து தைத்துவிட்டார்கள். இதனால் அவருக்கு தீராத தலைவலி வந்துவிட்டது. இந்த தலைவலியை போக்க அவர் சில பழக்கத்திற்குள் சென்றார். இதுதான் முதல் காரணம்” என கூறியுள்ளார்.