கடைசி படம்
விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப்போவதை முன்னிட்டு தனது சினிமா வாழ்க்கையில் இருந்து அவர் விடைபெறுகிறார். அந்த வகையில் விஜய்யின் 69 ஆவது திரைப்படம், அதாவது அவரது கடைசி திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ரீமேக் படம்
ஹெச்.வினோத் இயக்கும் “தளபதி 69” திரைப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த “பகவந்த் கேசரி” திரைப்படத்தின் ரீமேக் என்று சில மாதங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளிவந்தது. எனினும் அது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இது குறித்தான ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது “தளபதி 69” திரைப்படம் பாலகிருஷ்ணாவின் “பகவந்த் கேசரி” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்று கூறப்படுகிறது. தற்போது “தளபதி 69” திரைப்படத்தின் படப்பிடிப்பு பய்யனூரில் நடைபெற்று வருகிறது. அங்கே “பகவந்த் கேசரி” திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளில் போடப்பட்ட அதே மாதிரியான செட்டுகளை பய்யனூரில் போட்டிருக்கிறார்களாம். ஆதலால் இத்திரைப்படம் “பகவந்த் கேசரி” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என தெரிய வருகிறது.