பொங்கல் ரிலீஸ்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள “விடாமுயற்சி” திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 ஆம் தேதி வெளிவர உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் பணிகள் சூடு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தள்ளிப்போகும் விடாமுயற்சி
எனினும் இதனிடையே சமீபத்தில் வெளியான “விடாமுயற்சி” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலில் எந்த இடத்திலுமே பொங்கல் வெளியீடு என்று குறிப்பிடப்படவே இல்லை. ஆதலால் “விடாமுயற்சி” திரைப்படம் பொங்கலுக்கு வெளிவருமா? என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.

சென்சாருக்கு ரெடி இல்லை
இந்த நிலையில் “விடாமுயற்சி” திரைப்படத்தின் சென்சார் திரையிடல் நேற்று நடைபெறுவதாக தகவல் வெளிவந்தது. ஆனால் சென்சாரில் திரையிடுவதற்கு “விடாமுயற்சி” திரைப்படம் இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்று இயக்குனர் தரப்பில் கைவிரித்துவிட்டார்களாம். இதனால் வருகிற திங்கட்கிழமைக்குள் இத்திரைப்படத்தை முழுவதுமாக முடித்து சென்சாருக்காக திரையிட படக்குழு முயன்று வருவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.