தேசிய விருதை கைப்பற்றியவர்
“மனு நீதி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் இயக்குனராக அறிமுகமானவர் தம்பி ராமையா. அதன் பின் பல திரைப்படங்களில் வடிவேலுவுடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் கலக்கினார். மேலும் வடிவேலுவை கதாநாயகனாக வைத்து “இந்திரலோகத்தில் நா அழகப்பன்” என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

அதன் பின் பல திரைப்படங்களில் காமெடி கலந்த குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த தம்பி ராமையாவிற்கு “மைனா” திரைப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.
விஜய்யை கலாய்த்த தருணம்
தம்பி ராமையா விஜய்யுடன் இணைந்து “ஜில்லா” திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்போது படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு நகைச்சுவை சம்பவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்திருந்தார்.

அதாவது தம்பி ராமையா தனது உதவியாளர் ஒருவரை சல்மான் கான் என்று அழைத்தாராம். அதே உதவியாளரை மீண்டும் ஒரு முறை ஷாருக்கான் என்று அழைத்தாராம். அதை கவனித்த விஜய், “சல்மான் கான்னு கூப்பிட்டாலும் அவரே வரார், ஷாருக்கான்னு கூப்பிட்டாலும் அவரே வரார், என்னண்ணே இது?” என கேட்க, அதற்கு தம்பி ராமையா “எனக்கு பிடிக்காதவர்கள் பெயரை எல்லாம் என்னுடைய உதவியாளர்களுக்கு வைத்துவிடுவேன். சல்மான் என்னைய விட அழகாக இருக்கிறார். உயரமாக இருக்கிறார். அழகான ஹீரோயின்களுடன் டூயட் பாடுகிறார். பங்களாவில் இருக்கிறார். அதனால் பிடிக்காது” என்று கூற, அதற்கு விஜய், “அப்போ ஷாருக்கான்?” என கேட்க, “அவருக்கும் அதே பிரச்சனைதான்” என்று நகைச்சுவைக்காக கூறியிருக்கிறார். அதன் பின் விஜய் தயக்கமாக, “அப்போ என்னை?” என கேட்க, அதற்கு தம்பி ராமையா “அது எப்படி தம்பி நேர்ல சொல்ல முடியும்” என கூறியிருக்கிறார்.