விடுதலை 2
கடந்த 20 ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “விடுதலை 2”. இத்திரைப்படம் ரசிகர்கள்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்திருந்தாலும் தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாக இத்திரைப்படம் கொண்டாடப்படுகிறது.

பாரதிராஜா
இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஏற்று நடித்திருந்த வாத்தியார் என்ற கதாபாத்திரம் புரட்சிகர கதாபாத்திரமாக ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. எனினும் முதலில் இந்த கதாபாத்திரத்தில் பாரதிராஜாவை நடிக்க வைக்கலாம் என வெற்றிமாறன் எண்ணியிருந்தார். ஆனால் சில காரணங்களால் விஜய் சேதுபதியை தேர்வு செய்தார்.

உண்மை காரணம்
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கலை இயக்குனர் ஜாக்கி, “விடுதலை” திரைப்படத்தில் பாரதிராஜாவை நடிக்க வைக்காததற்கான காரணத்தை குறித்து பேசியுள்ளார். “பாரதிராஜாவின் உடல்நிலையை கருதி அவரை மலை மீதெல்லாம் ஏறவைத்து கொடுமை படுத்த வேண்டாம் என்பதற்காகத்தான் அவரை நடிக்க வைக்கவில்லை” என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதி ஏற்று நடித்திருந்த வாத்தியார் கதாபாத்திரம் காவல் துறையால் தேடப்பட்டு வரும் போராளி கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.