ஜெயிலர்
கடந்த 2023 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் அதிரடி வெற்றித் திரைப்படமாக அமைந்தது. ரஜினிகாந்த் அதற்கு முன்பு நடித்த “அண்ணாத்த” திரைப்படம் சரியாக போகவில்லை. அதே போல் நெல்சன் அதற்கு முன்பு இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இந்த வகையில் “ஜெயிலர்” திரைப்படம் இருவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

ஜெயிலர் 2
“ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து “ஜெயிலர் 2” திரைப்படத்திற்கான அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தோடு முடிவடையும் நிலையில் “ஜெயிலர் 2” படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.