இளம் நாயகன்
பல இளம் பெண்களின் மனதை கொள்ளைக்கொண்ட இளம் நாயகனாக வலம் வருபவர் அசோக் செல்வன். “சூது கவ்வும்” திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்ட அசோக் செல்வன், “தெகிடி”, “கூட்டத்தில் ஒருத்தன்”, “ஓ மை கடவுளே”, “போர் தொழில்”, “புளூ ஸ்டார்” போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படத்தில் அசோக் செல்வன் நடித்துள்ளார்.

முஃபாஸா
டிஸ்னி தயாரிப்பில் நேற்று உலகமெங்கும் வெளிவந்த “முஃபாஸா” அனிமேஷன் திரைப்படத்தில் டாகா என்ற சிங்கத்தின் கதாபாத்திரத்திற்கு அசோக் செல்வன் பின்னணி குரல் கொடுத்திருந்தார். மேலும் இத்திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளிலும் மும்முரமாக கலந்துகொண்டார். ஆனால் அவர் ஹீரோவாக நடித்திருந்த “எமக்கு தொழில் ரொமான்ஸ்” திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபடவில்லை என்று ஒரு கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.