முன்னணி நடிகர்
சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். “அமரன்” திரைப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ், சுதா கொங்கரா, வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தலா ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன்.
ராஷ்மிகாவால் வந்த சிக்கல்
இதற்கிடையில் சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. டிசம்பர் மாதம் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால் அத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்த ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் வேறு பல படங்களில் பிசியாக இருப்பதால் இப்போது கால்ஷீட் நாட்களை தர முடியாது என கூறிவிட்டாராம். ஆதலால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தள்ளிப்போகிறது. இத்திரைப்படத்தை Passion Studios நிறுவனம் தயாரிக்கிறது.

“அயலான்” திரைப்படத்தின்போது சிவகார்த்திகேயனுக்கு எழுந்த பொருளாதார சிக்கலை சமாளிக்க Passion Studios நிறுவனத்தார் சிவகார்த்திகேயனுக்கு ரூ.25 கோடி ரூபாய் கொடுத்ததாம். அந்த தொகையை தனது நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்துக்கொடுப்பதற்கான அட்வான்ஸாக எடுத்துக்கொள்ளுங்கள் என கூறினார்களாம். அந்த திரைப்படம்தான் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ள திரைப்படம்.
இந்த நிலையில் இத்திரைப்படம் தள்ளிப்போவது Passion Studiosக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறது. அதாவது Passion Studios நிறுவனத்தார் Gold Mines என்ற பாலிவுட் தயாரிப்பு நிறுவனத்திடம்தான் அந்த தொகையை வாங்கியுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போவதால் அந்த தொகையை திரும்ப கொடுக்குமாறு Gold Mines நிறுவனம் Passion Studio நிறுவனத்துக்கு அழுத்தம் தருகிறதாம். இதனால் சிவகார்த்திகேயனுக்கும் அழுத்தம் அதிகமாகிறதாம்.