இயக்குனர் தனுஷ்
நடிகர் தனுஷ் “ராயன்” திரைப்படத்தை தொடர்ந்து “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”, “இட்லி கடை” ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார். மேலும் “குபேரா” என்ற திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனுஷ் அடுத்ததாக இணையப்போகும் இரண்டு இயக்குனர்கள் குறித்த தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அசத்தலான காம்போ
“குபேரா” திரைப்படத்தை தொடர்ந்து “போர்த் தொழில்” திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம் தனுஷ். அதனை தொடர்ந்து “லப்பர் பந்து” திரைப்படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்துவின் இயக்கத்திலும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். இத்தகவல் தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.”போர் தொழில்”, “லப்பர் பந்து” ஆகிய இரண்டு திரைப்படங்களும் வித்தியாசமான கதையம்சத்தை உடைய ரசிகர்களால் அதிகளவு வரவேற்பை பெற்ற திரைப்படங்களாகும்.