நடன புயல்
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் பிரபு தேவா. அவர் நடனத்தை அசந்து பார்க்காதவர்கள் இந்தியாவில் யாருமே இல்லை என்று கூறலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம் மட்டுமல்லாது பல முன்னணி ஹிந்தி நடிகர்களுக்குமே நடன இயக்குனராக இருந்துள்ளார் பிரபு தேவா.

ஆட மறுத்த விஜயகாந்த்
அந்த வகையில் பிரபு தேவா, விஜயகாந்திற்கு பல திரைப்படங்களில் நடன அமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அவ்வாறு விஜயகாந்த் நடித்த “ராஜ துரை” என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “ராதா ஹே ராதா” என்ற பாடலுக்கு நடன அமைப்பாளராக பிரபு தேவா விஜயகாந்திற்கு நடனம் அமைத்தார். அந்த சமயத்தின்போது பிரபு தேவா சொல்லிக்கொடுத்த Stepகளுக்கு விஜயகாந்த் நடனமாட மறுத்துக்கொண்டே இருந்தாராம். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பிரபு தேவா விஜயகாந்தை தனியாக அழைத்து பேசி அவரை சம்மதிக்க வைத்துள்ளார். அதன் பிறகுதான் விஜயகாந்த் பிரபு தேவா சொல்லிக்கொடுத்த Stepகளுக்கு நடனமாடியுள்ளார்.

எனினும் அதற்கு முன்பு “பரதன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “புன்னகையில் மின்சாரம்” என்ற பாடலுக்கு பிரபு தேவா சொல்லிக்கொடுத்த அனைத்து Stepகளையும் முகம் சுழிக்காமல் ஆடினாராம் விஜயகாந்த். இன்றும் “புன்னகையில் மின்சாரம்” பாடல் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடலாக இருக்கிறது.