நடிகை திரிஷா:
தென் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையும் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் படித்திருப்பவர் தான் நடிகை திரிஷா. 40 வயதை கடந்தும் இன்று வரை தனது மார்க்கெட்டை நம்பர் ஒன் இடத்திலே தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் .

தொடர்ந்து விஜய், அஜித் என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துத வருகிறார். கடைசியாக விஜய்யின் கோட் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாகவும் தக்லைஃப் திரைப்படத்தில் கமல் ஹாசனுடன் திரிஷா நடித்து வருகிறார் .
திரிஷாவுக்கு காதல் மலர்ந்தது:
40 வயதை கடந்தும் கூட தனது மார்க்கெட் சறுக்கி விடாமல் தொடர்ந்து பிஸியாக உச்ச நடிகையாக இருந்து வரும் நடிகை திரிஷா காதல் குறித்து தனது instagram பக்கத்தில் பதிவிட்டு இருப்பது தான் தற்போது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

அதில் அவர் கூறி இருப்பதாவது வாழ்வில் ஒரு முறை மட்டும் தான் காதல் வரும். உண்மையான காதல் என்னவென்றால் ஒருவர் உங்களை உண்மையானவராக இருக்க விடுவதும் உங்களது புதிய பரிணாமங்களை ஏற்றுக் கொள்வதும் தான் என குறிப்பிட்டதுடன் ஈவில் இமோஜியுடன் திரிஷா இந்த பதிவை போட்டு இருக்கிறார்.

இந்த இமேஜை பிறர் கண் படக்கூடாது என்பதற்காக வைக்கப்படும் இமோஜியாகும். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அடடே அம்மணிக்கு காதல் வந்துவிட்டது போல…. யார் அந்த நபர்? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.