நயன்தாராவின் ஆவணப்படம்:
தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

இந்த நிலையில் இவர்களது திருமண வீடியோ nayanthara beyond the fairy tale என்ற ஒரு ஆவணப்படமாக நெட் ப்ளிக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த தொடர் வெளியாவதில் பல சிக்கல் ஏற்பட்டதாகவும், இதற்கு மறைமுகமாக நடிகர் தனுஷ் பெரும் சிக்கலாகவும் தொல்லை கொடுத்து வந்ததாகவும் நடிகை நயன்தாரா மூன்று பக்கங்கள் அடங்கிய குற்றச்சாட்டை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை கிளப்பியிருந்தார்.
தனுஷ் மீது புகார்:

மேலும் தங்களது காதல் பயணம் ஆக நானும் ரவுடிதான் படத்தின் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட காட்சி ஒன்றை வெளியிடுவதற்கு கிட்டத்தட்ட ரூ. 10 கோடி ரூபாய் வரைக்கும் எங்களிடம் கேட்கிறார்கள் என நயன்தாரா கூறுவது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது .
நீ பத்தினியா?
இந்த விவகாரம் இப்படி பரபரப்பாக பேசப்பட்டு வந்ததை அடுத்து நயன்தாராவை குறித்து பயில்வான் இந்த விஷயத்தில் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அது குறித்து அவருக்கு கூறி இருப்பதாவது, தனுஷ் பழிக்கு பழி வாங்குகிறார் என்று நீ சொல்ற அவர் உன் காதலுக்கு தடையா இருந்தாரா? சாபம் விடுறியே நீ என்ன கண்ணகியா?சாபம் விடுற அளவுக்கு நீ கண்ணகியும் கிடையாது பத்தினியும் கிடையாது.

நாலு பேரை காதலித்து விட்டு ஐந்தாவது ஒருத்தனை கல்யாணம் பண்ணி இருக்க… இவங்க மட்டும் netflixல கல்யாண வீடியோவை வித்து கோடி கோடியா வாங்கலாம்… அதே தனுஷ் கேட்டா மட்டும் தப்பா? என பயில்வான் ரங்கநாதன் நயன்தாராவை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அவரின் இந்த கருத்து நியாயமானது தான் என பலரும் பயில்வான் ரங்கநாதனிற்கு ஆதரவாகவும் நயன்தாராவை திட்டி தீர்த்தும் வருகிறார்கள்.