Tuesday , 19 November 2024
Home Cinema News 2 வருஷம் டார்ச்சர்… தனுஷ் மீது நயன்தாரா பகிரங்க குற்றச்சாட்டு! என்ன பிரச்சனை?
Cinema News

2 வருஷம் டார்ச்சர்… தனுஷ் மீது நயன்தாரா பகிரங்க குற்றச்சாட்டு! என்ன பிரச்சனை?

dhanush nayanathara

தனுஷ் மீது நயன்தாரா குற்றச்சாட்டு:

நடிகை நயன்தாரா பிரபல நடிகரான தனுஷ் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டை ஒன்றை முன்வைத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மூன்று பக்க கடிதம் ஒன்றை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார்.

இது திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக தற்போது பேசப்பட்டு வருகிறது.நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் ஒன்பதாம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டார்கள் .

சிக்கலில் சிக்கிய திருமண வீடியோ:

இந்த திருமணத்தின் ஆவணப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை netflix நிறுவனம் பெற்றிருந்ததால் அதிகாரப்பூர்வமாக அந்த நிகழ்வின் வீடியோக்கள் எதுவுமே வெளியாகவில்லை. அந்த ஆவணப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகிய அனைவரது கவனத்தையும் வைத்திருந்த நிலையில் இந்த திருமண நிகழ்வு வீடியோ வருகிற நவம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

nayanthara

இந்த ட்ரைலர் சமீபத்தில் வெளியான போது நடிகை நயன்தாரா தனுஷ் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறியிருக்கிறார்.அதாவது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

தனுஷ் நல்லவரே கிடையாது:

மதிப்பிற்குரிய தனுஷ் K ராஜா, S/O கஸ்தூரி ராஜா, B/O செல்வராகவன். பல தவறான விசயங்களை சரி செய்வதற்காகவே வெளிப்படையான இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். உங்கள் தந்தை கஸ்தூரி ராஜா அவர்கள் உறுதுணையோடு, சிறந்த இயக்குநரான உங்கள் அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் திரைத்துறைக்கு எந்து பிரபல நடிகராக மாறியிருக்கும் நீங்கள் நிச்சயம் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் தனி ஒரு ப்ண்ணாக, சவால்கள் நிறைந்த திரைத்துறைக்கு வந்து கடின உழைப்பாலும் நேர்மையான அர்ப்பணிப்பாலும் இன்றைய நிலையை அடைந்திருக்கிறேன். நேர்மறையான எனது பயணத்தை என் மீது அன்பு செலுத்தும் எனது ரசிகர்களும், திரைத்துறையினரும் நன்றாகவே அறிவார்கள்.

2 வருஷம் டார்ச்சர்…

நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் Nayanthara Beyond the Fairy Tale ஆவணப்படத்தை என்னைப் போலவே ஏராளமான எனது ரசிகர்களும் நலம் விரும்பிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ரசிகர்களின் அந்த ஆர்வத்தை பூர்த்தி செய்யவே இதில் பணியாற்றியிருக்கும் ஒவ்வொருவரும் பல்வேறு தடைகளையும் மீறி, அனைத்துப் பணிகளையும் முடித்து தற்போது வெளியீட்டுக்கு தயார் செய்திருக்கிறோம்.

உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும் எனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்திருக்கிறோம். காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்கான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில் என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த ‘நானும் ரௌடிதான்’ திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது.

நெட்ஃபிளிகஸில் வெளியாக இருக்கும் Nayanthara Beyond the Fairy Tale ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகளையும் பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில் உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எவ்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில் அந்த முடிவையே கைவிட்டு ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

  • nayanthara நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!
  • Related Articles

    nayanthara
    Cinema News

    நீ பத்தினியா? 4 பேரை காதலிச்சிட்டு 5வது கல்யாணம் பண்ணியிருக்க – நயன்தாராவை விளாசிய பயில்வான்!

    நயன்தாராவின் ஆவணப்படம்: தமிழ் சினிமாவை டாப் ஹீரோயினாக இருந்து வரும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்...

    gabrilla
    Cinema News

    விவாகரத்து வதந்திக்கு இப்படி ஒரு பதிலடியா? குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை!

    சுந்தரி சீரியல் நடிகை கேபிரில்லா: தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்த பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டவர் தான்...

    nayanthara
    Cinema News

    சினிமாவை விட்டு விலகிய நயன்தாரா? காரணம் அவர் தான் – பரபரப்பூட்டும் ஆவணப்படம்!

    நயன்தாரா ஆவணப்படம்: நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை...

    arun vijay
    Cinema News

    கனத்த இதயத்துடன்… பாலாவுக்கு அருண் விஜய் கடிதம் – “வணங்கான்” என்ன ஆச்சு?

    வணங்கான்: சூர்யா கைவிட்ட வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் தற்போது நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாலா...