நெப்போலியன் மகன் திருமணம்:
நடிகர் நெப்போலியன் தன்னுடைய மூத்த மகன் தனுஷுக்கும் அக்ஷயா என்ற பெண்ணுக்கும் ஆண்மையில் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்து அழகு பார்த்தார். இந்நிலையில் நடிகை நெப்போலியனின் மருமகள் அக்ஷயாவின் குடும்பத்தினர் ஜப்பானிலிருந்து ஊருக்கு கிளம்பும்போது நெப்போலியன் செய்த செயல் குறித்து அவரது மருமகள் அக்ஷயாவின் அக்கா பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் விஷயம்தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
எல்லாரும் தப்பா பேசினாங்க:
எங்களுக்கு பல வருடங்களாக நெப்போலியன் மாமனார் குடும்பத்தோடு நல்ல நட்பு இருக்கிறது. ஆனால் நாங்கள் எங்கள் தங்கையை நெப்போலியன் குடும்பத்திற்கு திருமணம் செய்து கொடுக்கப் போகிறோம் என்று குடும்பத்தில் கூட ஒரு சில தப்பாக பேசினார்கள். எங்களுக்கு நெப்போலியன் சார் குடும்பத்துடன் நல்ல சப்போர்ட் கொடுக்கிறார்கள். நாங்கள் தனுஷை ஜப்பானுக்கு வந்து தான் நேரில் பார்த்தோம். கிட்டத்தட்ட 20 நாட்களாக ஒன்றாக இருந்தோம்.
இப்போது எல்லோரும் ஒரு குடும்பமாக பழகிக் கொண்டிருக்கிறோம். அக்ஷயா எங்க வீட்டில் ரொம்ப செல்ல பொண்ணா இருந்தாங்க. நானும் அவளும் சின்ன வயசுல அதிகமா சண்டை போட்டுப்போம். ஆனால் என்னுடைய திருமணத்திற்கு பிறகு தான் எனக்கும் அவளுக்கும் அதிகமான பாசிப் பிணைப்பு ஏற்பட்டது.
கடைசியா நெப்போலியன் சொன்ன வார்த்தை:
இப்போ அவளை இவ்வளவு தூரத்தில் விட்டு விட்டு செல்வது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் நெப்போலியன் குடும்பத்தினர் அவளை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் எங்கள் குடும்பத்தோடு அக்ஷயா வீட்டிற்கு ஊருக்கு கிளம்பும்போது அக்ஷயா கண்கலங்கி அழுதுவிட்டார்.
அப்போது நெப்போலியன் தான் அக்ஷயாவிற்கு ஆறுதல் சொன்னார். எங்களிடம் நாங்கள் எங்க பொண்ணு போல பார்த்துக் கொள்வோம் என்று சொன்னார். அதேபோல திருமணத்தில் நெப்போலியன் சார் குடும்பத்தில் எல்லாருமே எங்களிடம் பல வருட பழக்கம் போல நடந்து கொண்டார்கள். அக்ஷயாவுக்கு மரியாதை வைத்திருக்கிறாரோ அதே மரியாதை பாசமும் எங்களிடமும் காட்டினார்கள் என அக்ஷயாவின் சகோதரி இந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.