நடிகை சாய் பல்லவி:
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வரும் நடிகை சாய் பல்லவி முதன் முதலில் மலையாள சினிமாவில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து தனது நடிப்பு வாழ்க்கை தொடங்கினார் .
அந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி மகுடத்தை சூட்டியது. மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நேச்சுரலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தை ஈர்த்த சாய் பல்லவி தொடர்ந்து தெலுங்கு தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களில் நடித்த மிக குறுகிய காலத்திலேயே உச்ச நட்சத்திர நடிகை என்ற இடத்தை பிடித்தார் .
அமரன் வெற்றி அசுர வளர்ச்சி:
இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து அமரன் திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார். இந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்து. வசூல் ரீதியாகவும் அவரை புகழின் உச்சத்தில் உட்கார வைத்தது.
இனிமேல் லேடி சூப்பர் நயன்தாரா:
அமரன் திரைப்படத்துக்கு ரூ. 3 கோடி சம்பளம் வாங்கிய சாய் பல்லவி அடுத்ததாக ராமாயணம் திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் ரூ. 6 கோடி சம்பளம் பேசி வாங்கியிருக்கிறாராம். இதன் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளார். கிட்டத்தட்ட நயன்தாரா இடத்தில் அசைக்க முடியாத அளவுக்கு சேர் போட்டு உட்கார இருக்கிறார். எனவே இனிமேல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இல்லை சாய் பல்லவி தான் என சினிமா வட்டாரம் முணுமுணுக்கிறது.