தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இருந்து வந்த நெப்போலியன் ஆரம்பத்தில் ஹீரோவாக சில திரைப்படங்களில் நடித்த பின்னர் வில்லன் பாத்திரங்களை ஏற்று நடித்த பிரபலமான நடிகராக இடத்தைப் பிடித்தார் .
நெப்போலியன் மகன் திருமணம்:
இவரது மூத்த மகன் தனுஷுக்கும் அக்ஷயா என்ற பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. ஜப்பானில் ஜாம் ஜாம் என்று இந்த திருமணம் நடைபெற்றது. தன்னுடைய மகன் தனுஷ் தசை அயர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் வீல் சேரிலே தன்னுடைய வாழ்க்கையை நகர்த்தி வரும் சமயத்தில் இப்படி ஒரு திருமணம் அவசியமா என நெப்போலியினை பார்த்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள் .
இந்த நிலையில் சமூக ஆர்வலரும் விமர்சகர்மான கிருஷ்ணவேல் என்பவர் சமீபத்திய நாட்களில் நெப்போலியன் மகன் திருமணம் குறித்து கடுமையாக விமர்சனங்களையும் முன் வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது நெப்போலியன் தனது மகனுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு எப்படி ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்?
பெண்ணின் வாழ்க்கையே அழிச்சிட்டாங்க:
மகனுக்கு நர்ஸ் தான் தேவை. ஒரு பொண்டாட்டி தேவை இல்லை. அவரை கவனித்துக் கொள்வதற்கு ஒரு செவிலியர் ஏற்பாடு செய்யாமல் திருமணம் என்ற பெயரில் ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்துவிட்டார் நெப்போலியன்.
மேலும், இந்த திருமணத்திற்கு சென்ற மீனா, குஷ்பு போன்றவர்கள் திருமணத்திற்கு பிறகு அந்தப் பெண் மிகவும் கொடுத்து வைத்தவர் தனுஷ் மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்க என்றெல்லாம் பேட்டி கொடுத்து இருந்தார்கள்.
உன் மகளை கட்டி கொடுப்பியா?
அப்படி பேசும் குஷ்பூ தனது மகளை தனுஷுக்கு திருமணம் செய்து வைத்திருக்க வேண்டியது தானே? அது அவரால் முடியுமா? என கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதை பலரது நியாயமான கேள்வி தான் என கூறி வருகிறார்கள்.