நடிகர் சூர்யா:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் சூர்யாவின் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி ரிலீசுக்கு தயாராக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் கங்குவா. வருகிற நவம்பர் 14ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மும்பையில் நடந்த பிரஸ் மீட் ஒன்றில் சூர்யா காலதாமதம் ஆக வந்திருக்கிறார். அப்போது சூர்யாவிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கடுமையாக சண்டை போட்டு இருக்கிறார்.
தாமதமா வந்த சூர்யா:
உங்களுக்காக நாங்கள் எதையும் எத்தனை மணி நேரமாக காத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் இவ்வளவு காலதாமதமாக வருகிறீர்களே பத்திரிகையாளர்கள் என்றால் ஒரு மரியாதை கிடையாதா? என்றெல்லாம் சூர்யாவை நேரடியாகவே திட்டி இருக்கிறார் அந்த பத்திரிக்கையாளர் .
அப்போது அவரை சமாதானப்படுத்திய சூர்யா அவருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றார். மேலும் என்னை மன்னித்து விடுங்கள் என கையெடுத்து கும்பிட்டு அந்த நிருபர் இடம் மன்னிப்பு கேட்டார் சூர்யா .
மன்னிப்பு கேட்ட சூர்யா:
அதன் பிறகு இந்த பிரச்சனை சமரசமாகி பின்னர் பிரஸ்மீட் தொடங்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக சூர்யாவுக்கு பலரும் ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அவர் இவ்வளவு டென்ஷனிலும் அந்த நிரூபருக்கு கூலாக பதில் கொடுக்கிறாரே அதுதான் சூர்யா என அவரின் நல்ல குணத்தை பாராட்டி வருகிறார்கள். இதுவே பாலிவுட் ஹீரோவாக இருந்தால் இப்படி எல்லாம் திட்டுவார்களா என நெட்டிசன்ஸ் அந்த நிருபவரை பயங்கரமாக விமர்சித்து வருகிறார்கள்.