தமிழ் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகையாக இருந்து வரும் அனுஷ்கா செட்டி தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டார். நல்ல கதை தேர்வு செய்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்ததால் மிக குறுகிய காலத்திலேயே ஃபேமஸானார்.
தற்போது அனுஷ்கா செட்டி நடிப்பில் “காதி” என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் அனுஷ்கா செட்டி வித்யாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குறிப்பாக மிகவும் தைரியமாக போல்டாக நடிக்கிறார் .
அந்த படத்தின் போஸ்டர் கூட வெளிவந்து படத்தின் மீதான கவனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் அனுஷ்கா செட்டி கலந்து கொண்டு பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார் .
அப்போது நான் அருந்ததி படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கொடுத்த பிறகு எனக்காக ஒரு மரியாதை ஒரு தனிப்பட்ட இடமே எனக்கு சினிமா துறையில் கிடைத்தது. அதன் பிறகு நான் சிம்பு நடிப்பில் வெளிவந்த வானம் திரைப்படத்தில் விலைமாது பெண்ணாக நடித்திருந்தேன்.
அந்த கேரக்டரை நான் ஏற்று நடித்த போதே எனக்கு பலவிதமான விமர்சனங்கள் வந்தது. அதாவது அருந்ததி போன்ற மிகச்சிறந்த கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு விலைமாது கேரக்டரில் நடிப்பதால் ஒட்டுமொத்த சினிமா கேரியர் பாதிக்கப்படும் என பலரும் எனக்கு அறிவுரை கூறினார்கள் .
ஆனால், எனக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்தது. அதனால் தான் நான் அந்த படத்தில் நடித்தேன். எனக்கு ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று இதயம் பூர்வமாக தோன்றி விட்டால் அது எனக்குள் லாக் ஆகிவிடும். அதில் கிடைப்பதில் லாபமாக இருந்தாலும் நஷ்டமாக இருந்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்வேன். அப்படித்தான் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிப்பதும் ரிஸ்க் என்று எனக்கு சொன்னார்கள்.
எனக்கு பிடித்ததால் நான் மனப்பூர்வமாக நடித்தேன். அதனால் எனக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகள் வந்தது.தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. ஆனாலும் என் மனதிற்கு திருப்தி இருந்தது என அனுஷ்கா அந்த பேட்டியில் மனம் திறந்து பேசினார்.